யுனிட்டி போன்ற கேமிங் தளங்களுக்கு திரையில் வேகமாக ரெண்டரிங் செய்வது தேவையாக இருக்கிறது. மிகவும் சிக்கலான எழுத்துருக்களைக் கொண்ட இந்திய மொழிகளுக்கு ஓபன்டைப் வடிவம் பயன்படுகிறது. ஆனால், அதற்கு அதிக செயல்பாடுகள் தேவை என்பதால், ரெண்டரிங் வேகம் சமரசம் செய்துகொள்ளப்பட வேண்டியதாக இருக்கும். எனவே, கேமிங் தளங்கள் ஓபன்டைப் வடிவத்தை ஆதரிப்பதில்லை. ஆனால், ரெவெரியின் யுனிட்டி ஃபாண்ட் எஸ்.டி.கே, டிஸ்பிளே எஸ்.டி.கே ஆகும். இது சிக்கலான இந்திய மொழிகளை ரெண்டர் செய்ய யுனிட்டி கேம் டெவலப்பர்ஸுக்கு உதவுகிறது. இது ட்ரூடைப் வடிவ எழுத்துருக்களை பயன்படுத்துகிறது.